ஊரடங்கு சட்டத்தை மீறிய 7,098 பேர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, March 31st, 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது ஆயிரத்து 702 வாகங்களையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர். இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் நாடு திரும்பியவர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். நாளைய தினத்திற்குள் பதிவு செய்யாத அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் இதுவரையில் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:


கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சரவையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சுட்டிக்...
தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் மாணவர்கள் – சமூக வைத்தியர் அயேஷா லொக்கு பாலசூரிய ...
நாளைமுதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம் - புகையிரதத் திணைக்களம் அறிவிப்...