பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை – பேக்கரி உரிமையாளர் சங்கம்!
Saturday, March 28th, 2020
தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு தோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி உற்பத்தி உணவுவகைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஊரடங்குச்சட்டம் காரணமாக மக்களின் உணவுத்தேவையின் ஒருபகுதியாக பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களை அவர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
Related posts:
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய விரைவில் விசேட குழு
கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் இணைப்பு!
ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பிரதமர் பங்கேற்பு!
|
|
|


