ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் பெருமிதம்!

Tuesday, May 26th, 2020

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளரத்தப்படுவதோடு பொதுப் போக்குவரத்து வசதிக்ளை வழங்கும் போது பல விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த காலகட்டத்தில் பொதுமக்கள் குறிப்பாக வர்த்தகர்கள் இந்த மாவட்டங்களுக்குள் நுழைவதற்கு விசேட ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரங்களை பெற்றே வருகை தந்தனர்.

இதன் ஊடாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை முழு உலகிற்கும் முன்மாதிரியாக இலங்கை வெளிக்காட்டியதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற முறைமைகள் உலகில் எந்தவொரு நாட்டிலும் பதிவாகவில்லை எனவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: