ஊரடங்குச் சட்ட நடைமுறையால் நாடுமுழுவதும் முடக்கம்!

Sunday, April 3rd, 2022

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.

நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

யாழ்ப்பாண நகருக்குள் நுழையும் பிரதான சந்திகள், வீதிகள் பொலீசார் ஆங்காங்கே நின்று வீதியால் செல்பவர்களை துருவித்துருவி விசாரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை என்பன இடம்பெறவில்லை என்பதுடன் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: