ஊடகவியலாளர் தயாபாரன் வீதி விபத்தில் படுகாயம்!

Saturday, April 20th, 2019

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் சிக்கி படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிலில் சென்ற அவரை பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கில் வந்த நபர் ஒருவர் மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

குறித்த ஊடகவியலாளர் உடுப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிலில் வந்து கொண்டிருந்த போது புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலைக்கு அண்மையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கில் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியுள்ளது.

விபத்துக்குள்ளாகி ஊடகவியலாளர் வீழ்ந்த போதிலும், அவரை மோதிய நபர் தனது மோட்டார் சைக்கிலை அங்கு நிறுத்தாமல், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

காயமடைந்த ஊடகவியலாளர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, அச்சுவேலி பிரதேச வைத்திய சாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts: