ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் திட்டத்தின் கீழ் 3 இலட்சம்!

Friday, June 22nd, 2018

இலங்கை ஊடகவியலாளரின் தொழில் தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் நிதி மற்றும் ஊடக அமைச்சால் சிறப்புக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகப் பணியில் மாகாண, இணைய, சுயாதீன, அங்கீகாரம் பெற்ற துறைகளில் பணிபுரிவோர் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஒன்றரை இலட்சம் தொடக்கம் மூன்று இலட்சம் வரை வழங்கப்படும் கடன் திட்டத்தைப் பயன்படுத்தி ஊடகப் பணிக்குத் தேவையான கணினி, ஒளிப்படக் கருவி, தொலைநகல் கருவிகள், இலத்திரனியல் ஒளிப்பதிவுக் கருவிகள் மற்றும் அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட உபகரணங்களைக் கொள்வனவு செய்ய முடியும்.

மூன்று ஆண்டுகளைப் பூர்த்தி செய்த, 60 வயதுக்கு உட்பட்ட அரச தகவல் திணைக்கள அடையாள அட்டையை வைத்துள்ள வருடாந்த வருமானம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெற்றுக் கொள்பவர்கள், இந்தக் கடனுக்கு தகுதியுடையவராகக் கணிக்கப்படுவார். மக்கள் வங்கியின் ஊடாக இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.

கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் அமைச்சின் நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார். விண்ணப்பப் படிவங்களை ஊடக அமைச்சின் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts: