ஊடகங்களை மேற்பார்வையிட சுயாதீன ஆணைக்குழு – ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க!

Thursday, November 24th, 2016

அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களை சர்வதேச தரத்திற்கும் முறைமைகளுக்கும் ஏற்ப மேற்பார்வை செய்வதற்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் தெரரிவித்துள்ளார்.

இதற்காக மக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற இருப்பதாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும் இணை அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

டிசம்பர் 31 வரை மக்களின் கருத்துகள் பெறப்பட்ட பின் சுயாதீன ஆணைக்குழு உருவாக்கவும் ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்க நெறியொன்றை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கம் ஊடகங்கள் மீது சட்டங்களை திணிக்கவோ அழுத்தங்களை பிரயோகிக்கவோ போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி குற்றஞ் சுமத்தியுள்ளார். ஆனால் அவரது காலத்தில் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதோடு 87 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 4 ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டதோடு 20 ஊடகவியலாளர்கள் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போனதோடு பலர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஊடக உரிமைகள், தர நிர்ணயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அச்சு ஊடகங்களை மேற்பார்வை செய்வதற்கு இருக்கும் பொறிமுறை பலவீனமானது. இலத்திரனியல் ஊடகங்களை மேற்பார்வை செய்வதற்கு எந்த பொறிமுறையும் கிடையாது.

இந்த நிலையில் அவற்றை மேற்பார்வை செய்யவும், ஒழுக்கநெறியை பின்பற்றுகிறார்களா என கவனிக்கவும் ஒழுக்க நெறியை மீறி செயற்படும் ஊடகங்கள் தொடர்பிலான மக்களின் முறைப்பாடுகளை விசாரணை நடத்தவும் புதிய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது என்றார்.

colgayanth01182653430_5043268_23112016_kaa_cmy

Related posts: