உழைப்பால் உயர்வோம் என்று உறுதி கொள்வோம் – மே தினச் செய்தியில் ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் தோழர் ஸ்ராலின் தெரிவிப்பு!

Friday, May 1st, 2020

கொரோனா தொற்றுக் காரணமாக தொழிற்துறைகளுக்கு செல்ல முடியாமல் நாற்பது நாட்களுக்கும் மேலாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்ற துரதிஷ்டமான நிலையில் தொழிலாளர் தினம் ஒன்றை நாம் எதிர்கொண்டுள்ளோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளரும் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான தோழர் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

உழைப்பாளர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக போராடுவதும் எனக்குள் வளர்க்கப்பட்ட குறிக்கோள்களாகும்.

அந்தக் குறிக்கோள்களை எனக்குள் வளர்த்த தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உழைப்பவர்களின்  தோழராகவே தன்னை முன்னிறுத்தி சமத்துவமான மானிட சமூகத்தை உருவாக்க தன்னை அர்ப்பணித்து இன்றுவரை உழைத்து வருகின்றார்.

தலைவர் அவர்களின் சமயோசிதமும், தீர்க்க தரிசனமும் வியப்பதற்கு மட்டுமல்லாது சித்திப்பதற்குமான வழிகாட்டல்களுமாகும்.

தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலை ஏற்றுக் கொண்டு உழைப்பதன் மூலமாகவே அனைத்துவகையான பின்னடைவிலிருந்தும் தமிழ்ச் சமூகம் மீள் எழுச்சி பெற்று மீண்டுவர முடியும்.

உழைப்பின் மூலமாகவே மனித சமூகம் அனைத்து உயர்வுகளையும் பெற்று கெளரமாக முகமுயர்த்தி வாழமுடியும் என்று நம்பும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்றைய நாளில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

தொழிலாளர்கள் முடங்கிப் போயுள்ள நிலையில் அவர்கள் நிவாரணங்களை எதிர்பார்த்து நிற்கும் இக்கட்டான நிலையில் வாழ்கின்றார்கள்.

தொழிலகங்கள் செயலிழந்து கிடப்பதால் தமது நாட்டின் உற்பத்திகளும், தயாரிப்புகளும் முடக்கப்பட்டுள்ளதால் நமது நாடு பொருளாதார பின்னடைவைச் சந்திக்க நேரிட்டுள்ளது.

இந்த முடக்கத்திலிருந்தும், பின்னடைவிலிருந்தும் நமது வாழ்வையும் , நாட்டையும் மீட்டெடுத்து முன்னேற்றத்தை அடைந்துகொள்ள முடியுமென்ற பெரு நம்பிக்கையுடன் இன்றைய நாளில் உறுதியெடுப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: