உள்ளூராட்சி மன்ற வர்த்தமானி 3 மாதங்கள் பிற்போடப்பட்டது!

Monday, July 3rd, 2017

உள்ளூராட்சி நிறுனங்களின் அமுலாக்க உத்தரவுகளின் வர்த்தமானியை அமுல்படுத்துவதற்கான நாள் 3 மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வர்தமானி அறிவிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்தது.மாகாணம் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தாப உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதா? இல்லை என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு தற்போது நாடாளுமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து பொறுப்புக்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: