உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 – யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது ஈ.பி.டி.பி!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாக்க கட்சி (ஈபிடிபி), இன்று 13 கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் நாடு பெரும் இக்கட்டான நிலையில் இருக்கின்றபோதிலும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருவதை அடுத்து தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்புமனு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்காக கட்டுப்பணத்தை செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இதற்கமைய, , யாழ். மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் சிரேஸ்ர ஆலோசகரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சி தவராசா ஆகியோர் மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தி, வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|