உள்ளூராட்சி மன்றங்களின் கன்னியமர்வு அடுத்தமாதம்!

உள்ளூராட்சி மன்றக் கன்னியமர்வு நாளை மறுதினம் 15 ஆம் திகதி நடைபெறும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அது தற்போது பிற்போடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே கன்னியமர்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வெளியிடப்பட்ட அரசிதழில் பெப்ரவரி மாதம் சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் கன்னியமர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது பிற்போடவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி ஆணையாளர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள உறுப்பினர்களுக்கு கன்னியமர்வு 7 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கவேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது என்பதால் 7 நாள்களுக்கு முன்னதாக அறிவித்தல் என்பது சாத்தியமில்லாதிருந்தது.
அத்துடன் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் விகிதாசார உறுப்பினர்களின் பெயர்கள் அரசிதழில் இன்னமும் பிரசுரிக்கப்படவில்லை. இவற்றால் ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் 2 ஆம் திகதி சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் கன்னியமர்வை நடத்த உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
|
|