உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் 29 இற்கு முன் சொத்து விபரம் தரவேண்டும்  தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, January 20th, 2018

எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்கனை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட:டள்ளளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது மேலும் இது தொடர்பாக தேர்தலில் போட்டியிடும் கட்சியின் செயலாளர்களுக்கு நேற்று முன்தினம் கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சில வேட்பாளர்கள் இது வரையில் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடம் பெறவுள்ள உள்@ராட்சி மன்றத் தேர்தலில் நாடாளாவிய ரீதியில் 57 ஆயிரத்து 252 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: