உள்ளூராட்சித் தேர்தல் 2023 -இவ்வாரம் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகம் தெரிவிப்பு!
Monday, January 30th, 2023எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இவ்வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.
இதேவேளை நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
தொலைபேசி அழைப்பின் மூலம் அவருக்கு நேற்று முன்தினம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்துள்ளதகவும் கூறினார்.
இதற்கு முன்னதாக இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|