பாடசாலை மாணவருக்கான உணவு சீர்கேடான இடத்தில் சமைக்கப்பட்டது  – சமையலாளருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டம்!

Friday, February 23rd, 2018

பாடசாலைகளில் வழங்கப்படும் போசாக்கு உணவை சுகாதார வசதி அற்ற முறையில் தயாரித்தவருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.

வவுனியாவில் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு போசாக்கு உணவுத் திட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த போசாக்கு சத்துணவுத்திட்டத்தை வழங்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்ட சிலர் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் வேறு இடத்தில் உணவுகளைத் தயாரித்து பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்கின்றார்கள்.

இவ்வாறு ஒருவர் மூன்று பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் உணவுகளைத் தயாரித்து வழங்கி வந்துள்ளார்.

நேற்றுக் காலை அந்தப் பகுதிக்கு திடீரென்று சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் உணவு தயாரிக்கும் இடத்தைப் பார்வையிட்டனர். அதன்போது சுகாதாரம் அற்ற முறையில் திறந்த வெளியில் உணவுகளைத் தயாரித்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த நபரைக் கைது செய்து வவுனியா நீதிவான் மன்றில் முற்படுத்தியபோது 5 ஆயிரம் ரூபா தணடம் விதிக்கப்பட்டது.

பாடசாலைகளில் உணவுகளைத் தயாரித்து வழங்கும்போது பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள், அதிபரின் கண்காணிப்பில் இவற்றை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு தனியார் உணவு தயாரித்து வழங்குவதால் அங்கு எவ்வாறான நிலையில் உணவு தயாரிக்கப்படுகின்றது என்பது குறித்து எவருக்கும் தெரியவருவதில்லை. வவுனியாவில் இவ்வாறு இடம்பெற்றுள்ளமை இது இரண்டாவது தடைவ என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: