உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 364 உறுப்பினர்கள் மேலதிகமாக தெரிவு!

Tuesday, February 20th, 2018

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெற்றுகொண்ட வாக்களிப்பு விகிதத்துக்கு அமைய அவர்கள் பெற்றுகொள்ள வேண்டிய உறுப்பினர்களுக்கு மேலதிகமாக அதிக தொகுதிகளை வெற்றிபெற்றதால் இம்முறை 364 உறுப்பினர்கள் மேலதிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் மேலதிக உறுப்பினர் ஒருவர் கூட தெரிவு செய்யப்படாத மாவட்டமாக கிளிநொச்சி இனங்காணப்பட்டுள்ளது.

இதன்படி இம்முறை மொத்தமாக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: