உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விளக்கம்!

Wednesday, September 6th, 2023

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம், நிதிப் பற்றிய குழுவில் விவாதிக்கப்படுவதற்கு முன்னதாக நாடாளுமன்றில் விவாதத்தை நடத்த தீர்மானித்தமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் எதிர்ப்பு வெளியிட்டனர்.

எதிர்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது, கருத்துரைத்த அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் குறித்து தமது குழு இதுவரை கலந்துரையாடவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்த நிலையில், அது தொடர்பில் விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும், விவாதங்களின் பின்னர், இது தொடர்பான விவாதத்தை இன்றும் நாளையும் நடத்துவது தொடர்பில், நிதிப் பற்றியகுழு இன்று கூடி அது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: