உல்லாசக் கடற்கரைக்கு வருவதை தவிருங்கள் – வேலணை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

Tuesday, March 17th, 2020

கொரோனா வைரஸி நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து வேலணை சாட்டி உல்லாச கடற்கரைக்கு வருவோர் அதனை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்’த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இலங்கையிலும் பரவியுள்ளது. அதிலும் குடாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வந்து சென்ற உல்லாசப் பயணிகள் மூலம் இந்நோய் பரவ வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றன.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குறிப்பாக களியாட்ட விடுதிகள் உல்லாசக் கடற்கரைகள் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டவர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் குறித்த இந்நோய்க் கிருமி பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக சாட்டி உள்ளிட்ட உல்லாசப் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்துக் கொள்ளும் நோக்குடன் வேலணை பிரதேச சபை சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

எனவே இந்நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சிரமம் பாராது ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேசசபையின் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: