உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம் இன்று!

Friday, May 31st, 2019

இன்று(31) உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் உலக சனத்தொகையில் எட்டு மில்லியன் மக்கள் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றதுடன், இவர்களில் ஒரு மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பதால் உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.

இதனைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் 21ஆம் நூற்றாண்டில் புகையிலை பாவனையால் பில்லியன் கணக்கான உயிர்களை இழக்க நேரிடும் என புகையிலை மற்றும் மதுபானம் சார் தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

புகையிலை உடலின் அனைத்து பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கையிலும் புகையிலை பாவனை காரணமாக வருடாந்தம் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விளக்கமளிப்பு நிகழ்ச்சித் திட்டம் காரணமாக புகைப்பிடித்தல் 14.05 சதவீதம் வரை குறைந்திருப்பதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பாலித்த அபயகோன் தெரிவித்துள்ளார். இந்த அளவை பத்து சதவீதம் வரை குறைப்பது அதிகார சபையின் இலக்காகும்.

Related posts: