உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கைக்கு 2 ஆவது இடம்!

Wednesday, December 29th, 2021

உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதன்படி 0.836 என்ற மதிப்பீட்டிற்கு அமைவாகவே இந்த இடத்தை இலங்கை பெற்றுள்ளது.

ஆயுட்காலம், பாடசாலைகளில் உள்ள தரங்களின் எண்ணிக்கை, தனிநபர் வருமானம், கார்பன் உமிழ்வு போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அபிவிருத்திச் சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணின் படி, கொஸ்டாரிகா முதல் இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஆசிய நாடாக இலங்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: