உறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு – அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ (Michael R. Pompeo) விடத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஜனநாயகத்தை மதிக்கும் பண்பை கொண்டிருப்பதாகவும், இலங்கையின் இறையாண்மைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமாதானம், வர்த்தக அபிவிருத்தி, பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் பொதுமக்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சித்திரை முதல் மெலிஞ்சிமுனை மக்களுக்கு வறட்சிகால குடிநீர் வழங்க நடவடிக்கை - ஊர்காவற்றுறை பிரதேச சபை ...
தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் 10 நாட்களில் நாட்டை வந்தடையும் - இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ...
|
|