உரிய பகுதிக்கே தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் – தகவல் திணைக்கள பணிப்பாளர்!

Sunday, February 12th, 2017

தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் அதனை விரிவாக முன்னெடுக்கும் பணி மாத்திரமே அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு இருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க  கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

ஆனால் தகவல் அறியும் சட்டம் கடந்த 3ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அரச தகவல் திணைக்களத்திற்கு கிடைத்திருப்பதாக

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில தினங்களுக்குள் மக்கள் இவ்வாறு ஆர்த்வத்துடன் செயல்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயம். தகவல்;களை பெற்றுக்கொள்ளவிரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை உரிய பகுதிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் வளவாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று காலை அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இது நடைபெற்றது.

தகவல் அறியும் சட்டத்தில் தகவல்களை வழங்குவதற்காக 800ற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகளில் ஈடுபடுபவோருக்கான  பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொலிஸ், பாடசாலை, வைத்தியசாலை, தொழிற்பயிற்சி  ஆகியவற்றுக்கே இன்னும் தகவல்களை தெரிவிப்பதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதில் பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு கண்டு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக நாடுகளுக்கிடையில் தகவல் அறியும் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் மூன்றாவது சிறந்த தகவல் அறியும்சட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான மத்திய நிலையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள  புதிய தரப்படுத்தல் பட்டியலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் உலகத்தில் மூன்றாவது சிறந்த தகவல் அறியும் சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.இந்தப்பட்டியலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் இதற்கு  முன்னர் ஏழாவது இடத்தில் இருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு பின்னர் இது 9ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டிருந்தது என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷான் விஜேதுங்க, தேசிய  ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி நவமணி பத்திரிக்கை ஆசிரியர் என் எம். அமின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

b3c05f261fc8824fe5a92c793f6c5115_XL

Related posts: