உயர்தரம் ,புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகளில் மாற்றம் இல்லை – மாணவர்களை பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தயாராகுமாறு பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, September 21st, 2022

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 4 ஆம் திகதியும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஜனவரி 2 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும் பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்விரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டால், பாடசாலை அட்டவணைக்கமைய  பாடசாலை நடத்தப்படும் திகதிகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை உள்ளிட்ட பரீட்சைகளையும் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும்; என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நடந்தால், இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மாத்திரமன்றி ஒட்டு மொத்த சந்ததியினரும் எதிர்கால உயர் கல்வி வாய்ப்புகளில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே திட்டமிட்டபடி இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தயாராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: