முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்!

Thursday, April 1st, 2021

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்லம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப் படும் எனவும் தற்போது புனித வாரம் அனுஸ்டிக்கப் படுவதனால் வருகின்ற திங்கட்கிழமை நல்லடக்கம் இடம் பெற வாய்பு உள்ளதாகவும் தெரிக்கப்படுகிறது.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து இன்று வெள்ளிவிழாக் காண்கிறார்.

இவர் மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.

ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்தார். நெடுந்தீவு றோ.க. பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

கண்டி தேசிய குருமடம், திருச்சி புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமிலியானுஸ் பிள்ளை ஆண்டகையினால் யாழ். மரியன்னை பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்வுநிலை ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை உட்பட இலங்கையின் ஏனைய ஆயர்கள் புடைசூழ மருதமடு அன்னை ஆலயத்தில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: