உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை – ஜனாதிபதி!

Saturday, February 23rd, 2019

உமா ஓய பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உமா ஓய பல்நோக்கு திட்டத்தின் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக ஜனாதிபதி அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போதே இந்த பணிப்புரை விக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் 92சதவீதமான நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சியுள்ள பணிகளையும் துரிதமாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அந்த திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய பல்நோக்கு திட்டங்களில் ஒன்றான உமா ஓய திட்டத்திற்கு 535 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

உமா ஓய பல்நோக்கு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலக்கீழ் மின்சார நிலையத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி இதன்போது பார்வையிட்டுள்ளார்.

தேசிய மின் உற்பத்தி முறைமைக்கு 120 மெகா வோட்ஸ் மின்சாரத்தை வழங்கும் இநத்நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்தத்திட்டத்தின் மூலம் புகுல்பொலவிலும் டயரபாவிலும் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன் இந்த நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.

Related posts: