உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தி!

Sunday, November 3rd, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தியடைந்துள்ளது.

சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டிருப்பதாகவும் இவை தற்பொழுது ஒப்பு நோக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அச்சக பிரிவின் முதல்வர் திருமதி.கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 தினங்களில் இவை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்