உங்களது கோரிக்கையை நிறைவுசெய்ய முயற்சிக்கின்றேன் – முன்னாள் காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் கண்ணன்

Saturday, March 12th, 2016

காரைநகர் ஊரி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று (11) அதிபர் இ.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வின் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட காரைநகர் கோட்ட கல்விப்பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி போட்டிகளை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வீரமுத்து கண்ணன் (ரஜனி) கலந்து சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்து உரையாற்றினார்.

இவர் தனது உரையில்-

பல தேவைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் இப்பாடசாலைக்கும் இப்பிரதேசத்திற்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட ஒதுக்கீடுகள் மூலம் பலதரப்பட்ட உதவிகளை முன்னர் செய்திருக்கின்றோம். அந்த நம்பிக்கையில்தான் இன்றும் எம்மிடம் இந்த பாடசாலை மைதானத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்புச் சுவர் அமைப்பதற்கான உதவியை கோரியுள்ளீர்கள். மேலும் ஊரி-பிட்டிஎல்லை, பாலாவோடை பிரதான வீதியையும் செப்பனிடுவதற்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளீர்கள்.

முன்னர் எமது கட்சியிடம் உடனடியாக செயற்றிட்டங்களை செய்வதற்கான அதிகாரங்கள் இருந்தமையால் மக்களது தேவைகளுக்கான தீர்வுகளை எமது கட்சி உடனடியாக மேற்கொண்டுவந்தது. ஆனால் தற்போது எம்மிடம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மட்டுமே உள்ளது. இந்த அதிகாரத்தைக்கொண்டு  எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கான தேவைகளை முடியுமான அளவு செய்துவருகின்றார்.

தற்போது நீங்கள் முன்வைத்த  கோரிக்கையையும்  செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று  தீர்வை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சி செய்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

2


வாக்காளர் இடாப்பில் இணைந்து கொள்ளாதவர்களுக்கு விசேட பிரச்சாரம்!
கண் வில்லைகளின் விலையை குறைக்க சுகாதார அமைச்சு முயற்சி!
எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கம் -  ஜனாதிபதி சந்திப்பு!
யாழ் மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்களுக்குப் பயிற்சி!
யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம்!