உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் துருக்கியில் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை!

Thursday, March 10th, 2022

உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது.

உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டெமைட்ரோ குலிபா சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.

அதன்படி துருக்கியின் அன்டாலாயா நகரில் இன்றையதினம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

இந்நிலையில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லொவ்ரோவும் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.

துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவ்சொக்லுவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கி விஜயம் செய்துள்ளனர்.

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதல் தடவையாக உயர் மட்டத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரஷ்ய படையினர் உக்ரைன் வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

000

Related posts: