ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் – கிளி.அம்பாள் விளையாட்டுக் கழகம்!

Saturday, September 15th, 2018

நீண்ட காலமாக புனராமைப்பிற்கு உட்படுத்தப்படாத எமது விளையாட்டு மைதானத்திற்கான நிதியுதவியை தந்துதவிய மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வை.தவநாதன் அவர்களுக்கு என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இந்த நிதியுதவியின் பயனாக இன்று எமது கிராம இளைஞர்கள் இந்த மை தானத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு கிளிநொச்சி எள்ளுக்காடு அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் போசகரான அந்தோனிப்பிள்ளை ஜெயகரன் தெரிவித்துள்ளார்.

மக்களின் மீள்குடியேற்றத்தின் பின்னர் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் இருந்த எமது அம்பாள் விளையாட்டுக் கழகத்திற்கான நிதியினை மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களிடம் கேட்ட பொழுது எதுவித மறுப்புமின்றி தனது நிதியிலிருந்து கடந்த 2017 ம் ஆண்டில் தந்துதவியிருந்தார் என்று தெரிவித்த போசகர் ஜெயகரன்

மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு பல உதவிகள் கிடைக்காத நிலையிலும் மாகாணசபை உறுப்பினர் அவர்கள் எமது கிராமத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு மேற்கொண்ட உதவியின் பயனாக இளைஞர்களின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் போசகர் ஜெயகரன் சுட்டிக்காட்டினர்.

மேலும் தொடர்ச்சியாக எமது கிராம மட்ட செயற்பாடுகள் குறித்த செயற்றிட்டங்களுக்கு எம்மால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளையும் ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் தன்னாலான உதவித்திட்டங்களை மேற்கொள்வதாகவும் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளமை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் போசகரான அந்தோனிப்பிள்ளை ஜெயகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: