ஈஸ்ரர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விஷேட கடிதம்!

Wednesday, May 29th, 2019

நாட்டில் கடந்த ஏப்ரல் 21 நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள், இலங்கை காவற்துறையின் பொறுப்பு வாய்ந்த மற்றும் நம்பக தன்மை கொண்ட சுயாதீன குழு ஒன்றிடம் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்போதைய காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றம் ஒன்று இழைக்கப்பட்டவுடன் அது தொடர்பான விளக்கங்களை நீதிமன்றில் முன்வைக்க வேண்டியது காவற்துறை மா அதிபர் முதல் சகல காவற்துறை நிலையங்களின் பொறுப்பதிகாரிகளதும் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இதுவரை அவ்வாறான எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை என்பது பாரதூரமான ஒரு விடயம் என விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related posts: