மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் அதிருப்தி!

Friday, March 9th, 2018

நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகளின் அமுலாக்கத்தை இலங்கை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட்ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் அதிருப்தி அளிப்பதாகவும் இது அண்மைய நாட்களில் இலங்கையில்சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. இந்த விடயத்தை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறை அமுலாக்கத்தில் உரிய வகையில் அரசாங்கம் செயற்படவில்லை எனில்  இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் சர்வதேச நீதிப்பொறிமுறையை பயன்படுத்த ஊக்கமளிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 21ம் திகதி மனித உரிமைகள் ஆணையாளரது இந்த அறிக்கை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

எதிர்கட்சிகள் முன்னெடுக்கும் திட்டங்களை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம் - வெளிவிவகார அமைச்சர் தினே...
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து சேவை முன்னெடுக்கப்...
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை - நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பா...