பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பிக்கிறது!

Monday, August 5th, 2019

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழாவினையடுத்து 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிஸார் கோரியுள்ளனர்.

ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் ஆராய்ந்தனர். அவர்களுடன் மாநகர சபை பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

திருவிழாவிற்கு வரும் பக்த அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையினால் 3 இலட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என்று பொலிஸார் கோரியுள்ளனர்.

இதேவேளை, தமக்கு மேலதிகமாக சோதனைக் கூடங்கள் தேவைப்பட்டால், அவற்றைச் செய்துதருமாறு பொலிஸாரால் கோரப்பட்டது. குறிப்பாக 12 சோதனைக் கூடங்கள் அவசியம் என்றும் இதன்போது பொலிஸ் அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்டப்ட பயங்கரவாதத் தாக்குதலை நினைவுபடுத்தி பக்த அடியார்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அதிகளவான சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 இலட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பமாகிறது. 25 நாள்கள் இடம்பெறும் இந்தத் திருவிழாக்களில் வழமை போன்று வீதி மறியல்கள் போடப்படுவதுடன் மாற்றுவழிகள் தொடர்பிலும் அறியத்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: