ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் அரியாலை ஜெயபாரதி சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

அரியாலை ஜெயபாரதி சனசமூக நிலையத்தின் பயன்பாடுகளுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தாவின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த சனசமூக நிலையத்தில் அடிப்படைத் தேவகைளாக நீண்டகாலமாக நிலவிவந்த அலுமாரி மற்றும் கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களை கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் வழங்கிவைத்துள்ளார்.
நேற்றையதினம் (16) நடைபெற்ற குறித்த உதவி வழங்கும் நிகழ்வில் மாதர்சங்க உறுப்பினர்கள் மற்றும் சனசமூகநிலைய உறுப்பினர், செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related posts:
பிள்ளையான்கட்டு இந்து மயானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்கள் : நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ். மா...
ஜனாதிபதியின் வரலாற்றுப் பொதுமன்னிப்பு!
ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
|
|