ஈரான் ஜனாதிபதி கோரிக்கை – தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்கும் விவசாய அமைச்சர்!

Saturday, April 27th, 2024

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்த போது விடுத்த கோரிக்கைக்கு இணங்க, ஈரானின் தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பங்கேற்கவுள்ளார்.

இந்த EXPO கண்காட்சியில் கலந்துகொள்வதில்லை என முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், ஈரான் ஜனாதிபதியின் கோரிக்கை நிமித்தமே தமது முடிவை மாற்றிகொண்டதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று(26) ஈரானுக்கு பயணமானார்.

இதன்போது ஈரானின் விவசாய அமைச்சரை சந்தித்து புதிய விவசாய தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: