ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை – விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அறிவிப்பு!

Friday, August 11th, 2023

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் தெஹ்ரானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதேவேளை   சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள சபஹார் நகரைச் சேர்ந்த 9 ஈரானிய மாலுமிகள் இலங்கை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்நாட்டு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: