உள்நாட்டு நீதிபதிகள் மட்டுமே இடம்பெறுவர் – அரசாங்கம் திட்டவட்டம்!

Friday, November 4th, 2016

உள்நாட்டு நீதிபதிகளைக்கொண்டே அரசாங்கம்  நீதிப் பொறிமுறை குறித்த உள்ளக விசாரணையை முன்னெடுக்கும். எக்காரணம் கொண்டு  சர்வதேச நீதிபதிபகளை என்று அரசாங்கம் திட்டவட்டமாக நாடாது என ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையின் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையற்று காணப்பட்டனர். ஆனால் தற்போது நீதித்துறை சுயாதீனமானது என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். எனவே உள்ளக பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் இல்லை என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது.

இது தொடர்பில் ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவிதாரன மேலும் குறிப்பிடுகையில்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் உள்ளக விசாரணை பொறிமுறையொன்று முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அந்த வகையில் அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக விசாரணையை முன்னெடுக்கும்.

அந்த பொறுப்புக்கூறல் விசாரணை செயற்பாட்டில் எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் உள்ளீர்க்காது மாறாக உள்நாட்டிலுள்ள நீதிபதிகளை கொண்டே நாங்கள் விசாரணை பொறிமுறையை முன்னெடுப்போம். எமது உள்நாட்டு நீதிபதிகள் இதனை சிறப்பாக செய்வார்கள் என்றார்.

asd1

Related posts: