இ.போ.ச வினருக்கு அடுத்த வருடம் சீருடை !

Wednesday, July 18th, 2018

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் அடுத்த வருடம் தொடக்கம் சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடிசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தூர சேவை பேருந்துகளின் ஆசனப்பதிவுக்காக உருவாக்கப்பட்ட இணையத்தள ஆரம்ப நிகழ்வு சபையின் கொழும்பு முதன்மை பணியகத்தில் நேற்று இடம்பெற்றது. அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: