இலவசக் கல்வி முடக்கப்படாது!

Saturday, April 29th, 2017

நாட்டில் இலவசக் கல்வியை ஒருபோதும் முடக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வியின் தந்தை அமரர் CWW கன்னங்கரவின் உருவச் சிலை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட உள்ளது. அது பற்றிய விபரங்களை அறிவிப்பதற்காக  நேற்று நடைபெற்ற   செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

உருவச் சிலையை அமைப்பதற்கு நன்கொடை கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.சுமகால அரசாங்கம் மாணவ சமூகத்தின் கல்வி உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது. மாணவர் கல்விக்காக கூடுதலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது என்றும்  அமைச்சர் கூறினார்.

Related posts: