இலங்கை விவசாயிகள் , பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் நியூசிலாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு 500,000 டொலர்களை நிதியுதவி!

Saturday, May 14th, 2022

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் என  500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா (Nanaia Mahuta) ட்விட்டர் செய்தி ஊடாக தெரிவித்துள்ளார்.

இது இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 30 வருட கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், இந்த 30 வருட காலத்திற்குள் நியூசிலாந்து இலங்கைக்கு 25.07 மில்லியன் நியூஸிலாந்து டொலர்களை அபிவிருத்தி திட்டங்களுக்காக உதவியாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: