இலங்கை வந்தடைந்தார் இந்தோனேசிய ஜனாதிபதி!
Wednesday, January 24th, 2018
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று வந்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இன்று மாலை ஜனாதிபதி செயலக வளவில் இராணுவ மரியாதை இடம்பெறவுள்ளது.இதனை தொடர்ந்து இலங்கை மற்றும் இந்தோனேசிய அரச தலைவர்களுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பொருளாதாரம் வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. நாளை இந்தேனேசிய ஜனாதிபதிக்கு பிரதமர் பகல்போசனம் வழங்கவுள்ளார்.
Related posts:
A/L பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலிடப்பட்டது!
உதய ஆர்.செனவிரத்ன ஜனாதிபதி செயலாளராக நியமனம்!
உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை - அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவிப்ப...
|
|