இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டி ஏற்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால், அதனையும் தனியார் மயமாக்க வேண்டியிருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனியார் மயமாக்கலின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

வரும் ஆண்டில் பல டிஜிட்டல் திட்டங்களை செயல்படுத்த இலங்கை போக்குவரத்துச் சபை திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துச் சபையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரிப்பதற்காக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பணிப்பாளர் தலைமையில் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பொதுப் போக்குவரத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் மோசமாகிவிட்டது - பொதுச் சுகாதார பரி...
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால விசா - அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அம...
நெல் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து களைக்கொல்லிகளையும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிக...