இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கான சேவையை நீடிக்க ஐ.நா மறுப்பு!

Wednesday, June 26th, 2019

அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த 11 இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் சேவையை நீட்டிக்க, அங்குள்ள ஐ.நா அலுவலகம் மறுத்துள்ளது.

தென் சூடானில் கடமைகளில் ஈடுபட்டிருந்த 11 இலங்கை பொலிஸாருக்கே இவ்வாறு சேவை நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளின் பதவிக்காலம் இந்த மாதம் 30ம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில், அவர்களிற்கு மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்க இலங்கை தயாராக இருந்தது.

இந்த நிலையில், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில், அவர்கள் தொடர்பான மனித உரிமை செயற்பாட்டு அறிக்கை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பொலிஸாரின் சேவை நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில், மனித உரிமை ஆணையம் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதும், குறித்த அறிக்கை தாமதத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.