போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் வழங்கப்படவேண்டும்  கிளி.மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம் 

Thursday, June 9th, 2016

கிளி­நொச்சி மாவட்­டத்தில் பல்­வேறு அபி­வி­ருத்திப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருகின்றபோதும் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உள ஆற்­றுப்­ப­டுத்தல் விரைவில் வழங்கப்­ப­ட­வேண்டும் என கிளி­நொச்சி மாவட்ட அர­சாங்க அதிபர் சுந்­தரம் அரு­மை­நா­யகம் தெரிவித்துள்ளார்

தேசிய நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வாக பாதிக்­கப்­பட்ட மக்­களை ஆற்றுப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பாட்டு நிலையம் ஒன்­றினை அமைப்­பது தொடர்­பான கலந்துரையாடல் கிளி­நொச்சி மாவட்டச் செய­லக மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்­று­முன்­தினம் மாவட்ட அரச அதிபர் சுந்­தரம் அரு­மை­நா­யகம் தலை­மையில் நடை­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்ட கோரிக்­கையை முன்­வைத்தார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மீள்­குடி­யேற்றப் பிர­தே­சங்­களில் வீதி அபி­விருத்­திகள், திணைக்­களக் கட்­ட­டங்கள், உட்­கட்­டு­மான வச­திகள் போன்ற அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்­கொண்டு வருகின்றோம். இத்­த­கைய அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்­டாலும் சமூகத்தில் அபி­வி­ருத்தி முன்னெ­டுப்பில் பாரிய இடை­வெளி காணப்­ப­டு­கின்­றது

இந்த நிலையில் தற்­போது நல்ல ஓர் சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதா­வது உள­வ­ளத்­துறை சமூக மேம்­பா­டுகள் தொடர்­பாக உள்­ளூரில் உள்ள வள­வா­ளர்­களை வளப்­ப­டுத்தி அவர்கள் மூலம் மக்களுக்கான உள ஆற்­றுப்­ப­டுத்­தல்­களை மேற்­கொள்­வ­தாகும். இதன்­மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலை­களை ஓர­ளவு ஆற்­றுப்­ப­டுத்­த­மு­டியும் என்ற அடிப்­ப­டை­யி­லேயே இந்த வேலைத்­திட்டம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது எனத் தெரி­வித்தார்

இந்­நி­கழ்வில் உள­வ­ளத்­துறை நிலை­யத்தைச் சேர்ந்த வைத்­தியர் தர்சன் பெரேரா, கரைச்சி, கண்டாவளை, பூந­கரி பச்­சி­லைப்­பள்ளி, ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் கட­மை­யாற்றும் பெண்கள் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர், கிளிநொச்சி மாவட்ட உதவிப்பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: