இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் – இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Thursday, July 28th, 2022

இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை எதிர்பார்த்துள்ள நிலையிலேயே இந்த கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ளது.

சீனா இலங்கையை பொறுத்தவரை பாரிய கடன் வழங்குநராக உள்ளது. எனவே மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சீனாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் ரொயட்டர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

2.2 கோடி மக்கள் வசிக்கும் இலங்கையின் வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன்படி எரிபொருள் இறக்குமதியை 12 மாதங்களுக்கு கட்டுப்படுத்த அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.

இன்ஸ்டிடியூட் ஒஃப் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் தரவுகளின்படி வங்கிக் கடன்கள் மற்றும் மத்திய வங்கி இடமாற்ற நிதி உட்பட வகையில் பீஜிங்கிற்கு இலங்கை சுமார் 6.5 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டியுள்ளது.

இந்தநிலையில் தமது கடனை நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கை சீனாவுடன் பேசவேண்டும் என்று கோரியுள்ள ஸ்ரீனிவாசன், இலங்கை அதிகாரிகளுடன் தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கோரிக்கை தொடர்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பன பதிலளிக்கவில்லை. அத்துடன் இலங்கையில் உள்ள சீன தூதரகமும் உடனடியாக பதில் அளிக்கவில்லை என்று ரொயட்டர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும்போதுதான் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும் - ஐங்கரன்!
நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமைய...
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பதிவு - ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம்...