இலங்கை ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்தும் – வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன !

Saturday, March 13th, 2021

ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்துவதிலான உறுதிப்பாட்டை இலங்கை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஜெனிவா தொடர்பான புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தூதுவர்கள் மன்றத்தினால் தொகுக்கப்பட்ட ‘ஜெனீவா நெருக்கடி – முன்னோக்கிச் செல்லும் வழி’ என்ற புத்தகம் வெளிவிவகார அமைச்சில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் புத்தகத்தில் ஜெனீவா நெருக்கடி தொடர்பான இருபத்தி எட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய வெளிவிவகார அமைச்சர் வெளியுறவுச் செயலாளர் உட்பட பல முக்கிய நபர்களால் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் நிபுணர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்வியியலாளர்கள் பலர் இந்தப் புத்தகத்திற்காகப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் தூதுவருமான சரத் விஜேசிங்க, எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு பிரதிபலிப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக அன்றி ஜெனீவா நெருக்கடியின் முழுமையான எதிர்காலத்தையும் மையமாகக் கொண்ட ஒரு தீர்வாக இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்..

இந்நிலையில் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்தினார்.

தற்போது நிலவும் தொற்று நோயைக் கருத்தில் கொண்டு உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: