இலங்கை கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டெழுந்துவிட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவர் சந்திமா ஜீவந்தர தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021

நாடு கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டதாக யூகிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் மருத்துவர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஆராய்ச்சி அறிக்கையை மேற்கோள் காட்டி, தொற்றுநோயின் ஆபத்தான கட்டத்தைக் கடந்து விட்டோம் என தீர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவது அனைவரதும் பொறுப்பாகும்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் பொறுப்புடன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பரி சோதனை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: