இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது – இந்த கடினமான சவாலையும் வெற்றிகொள்ளும் – சீன தூதுவர் நம்பிக்கை !
Monday, January 10th, 2022யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயம் மற்றும் யாழ்ப்பாணதீவுகளில் மின்சக்தி திட்ட் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ள சீன தூதுவர் கொவிட் நிலவரம் காரணமாகவே யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயம் தாமதமானது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கில் இருக்கின்றது – எந்த நாட்டிற்கும் தெற்கில் இல்லை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று தசாப்தகால யுத்தம் வெற்றிகரமாக முடித்துவைக்கப்பட்ட பின்னர் வடபகுதிக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து சீனா ஆர்வமாக உள்ளது எனவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்காமல் பல நாடுகள் பின்வாங்கிய போது சீனா இலங்கைக்கு அவசியமான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு இரகசிய நிகழ்ச்சி நிரல் உள்ளது என்பதை நிராகரித்துள்ள தூதுவர் வடபகுதி மின்திட்டங்களை இரத்துச் செய்வதால் இலங்கைக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்படாலம் என தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் முன்னெடுக்கப்படும் திட்டத்தை சீனாவின் தனியார் துறையினர் கேள்விப்பத்திர முறை மூலம் பெற்றுக்கொண்டனர் – சீன தூதுரகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் ஐலண்ட எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்துகொள்வது குறித்து விருப்பத்தை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கூடியவிரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் பத்திரிகையாளர்கள் சிலருடனான கருத்துப்பரிமாற்றத்தின் போது இதனை தெரிவித்துள்ள சீன தூதுவர் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை சீனா எந்த தருணத்திலும் தனக்கு சாதகமாக பயன்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததை எனவும் சீன தூதுவர் வர்ணித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுவரும் நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சீனாவும் இலங்கையும் இணைந்து எடுத்துள்ள முயற்சிகள் குறித்து சீன தூதுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள கடனை மீள திருப்பி செலுத்தவேண்டிய நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தூதுவர் இலங்கை இந்த கடினமான சவால்களை வெற்றிகொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது என தெரிவித்துள்ள தூதுவர் தற்போதைய நிலவரம் தற்காலிகமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கு எவ்வாறு நீண்ட கால அடிப்படையில் உதவியாக விளங்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அது இலங்கைக்கு பாதகமானது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளார்.
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை சில நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள சீன தூதுவர் இலங்கை தாமதமின்றி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை உறுதி செய்யவேண்டும் ஊடகங்கள் இது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|