அடுத்தவாரம் கேள்விப்பத்திர திறப்பு!
Saturday, December 2nd, 2017
வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கான கேள்விப்பத்திர திறப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டுத் திட்டத்துக்காக சுமார் 40 நிறுவனங்கள் கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளன இந்த கேள்விப் பத்திரங்கள் கடந்த மாதம் திறக்கப்பட முடிவுசெய்திருந்தபோதும், அந்தப் பணிகள் பிற்போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த கேள்விப்பத்திரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.
Related posts:
அரசியல் கைதிகளுக்கான சிறந்த ஆயுதம் தகவலறியும் சட்டமூலம்!
அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகள் அமைக்க திட்டம் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது - அரசாங்கம் அறிவிப்ப...
|
|
|
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு பின்நிற்கப் போவதில்லை - அரச வங்கிகளுக்கு ஜனாதிபதி கோட...
மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா திருப்பலி நாளை - மன்னார் வருகின்றார் ஜனாதிபதி - விசேட பாதுகாப்பு ஏற...
தொடரும் மோசமான காலநிலை - 20 மாவட்டங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலை...


