இலங்கை இராணுவம் எந்நிலையிலும் தயாராகவே உள்ளது!

நாட்டின் இராணுவத்தினர் எந்தவொரு இக்கட்டான நிலைமைக்கும் முகங்கொடுக்க கூடிய அளவில் தயாராகவுள்ளதாக பாதுகாப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு பிரிவானது ஒழுக்கம் மற்றும் பயிற்சிகளில் முன்னணி வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், 80 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்ததுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கலந்து கொண்டுள்ளார். இதேவேளை, அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடும் போதும் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்யும் போதும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாடானது செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை லண்டனில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|