இலங்கை – இந்திய கடற்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இணக்கம் !

Sunday, July 26th, 2020

இலங்கை – இந்திய கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் கடற்படை தளபதி நிசாந்த உலகேதன்னவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடத்திய பேச்சுவார்த்தையின்போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

வைஸ் அட்மிரல் நிசாந்த உலகேதன்ன இலங்கையின் 24வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவருடன் உரையாடிய இந்திய கடற்படை தளபதி, இலங்கையின் கடற்படையை வலுவூட்ட தேவையான ஒத்துழைப்பை வழங்க தயார் என்று உறுதியளித்துள்ளார்

அதேநேரம் இலங்கையின் கடற்படையினருக்கு இந்தியாவில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: