இலங்கை அமைச்சரவை முடிவை வரவேற்கத்தக்கது – சீன நிறுவனம்!

Friday, March 26th, 2021

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான இலங்கையின் அமைச்சரவை முடிவை வரவேற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த இந்த திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவுவதற்கான திட்டத்திற்கு ஏற்கனவே ஜனவரி மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி கொழும்பு துறைமுக நகரம் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சர்வதேச வணிக மற்றும் சேவை மையமாக மாற்றியமைக்கப்படும்.

இந்தநிலையில் குறித்த யோசனையை வர்த்தமானியில் வெளியிட்டு விரைவில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்கத்தக்கது. அத்துடன் இந்த முயற்சி இலங்கைக்கு அதிக நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக போர்ட் சிட்டி முதலீட்டாளர் நிறுவனமான போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: